வீரர்கள் ஒவ்வொருவராக பகடையை உருட்டி, அதில் விழும் எண்ணின் அளவுக்கு தங்கள் காயை கட்டங்கள் நகர்த்த வேண்டும். ஒரு நகர்வை முடித்ததும், ஒரு வீரரின் காய் ஒரு "ஏணியின்" குறைந்த எண் கொண்ட முனையில் விழுந்தால், அந்த வீரர் காயை அந்த ஏணியின் அதிக எண் கொண்ட கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். ஒரு வீரர் ஒரு பாம்பின் அதிக எண் கொண்ட கட்டத்தில் வந்து விழுந்தால், காய் அந்தப் பாம்பின் குறைந்த எண் கொண்ட கட்டத்திற்கு கீழ்நோக்கி நகர்த்தப்பட வேண்டும். ஒரு வீரர் 6 ஐ உருட்டினால், காயை நகர்த்திய பிறகு, அவர் உடனடியாக மற்றொரு முறை விளையாடலாம்.