எதிரிக்கும் உங்கள் தளத்திற்கும் இடையே அரணாக நிற்கும் ஒரே வீரர் நீங்கள். பதுங்கி இருந்து, உங்கள் தளங்களை நோக்கி எதிரி வீரர்கள் முன்னேறும்போது, அவர்களைக் குறிபார்த்துச் சுட்டு வீழ்த்து. ஒவ்வொரு வீழ்த்தலுக்கும் உங்களுக்குப் பணம் கிடைக்கும். அதை உங்கள் ஆயுதங்களை மேம்படுத்தவும், உதவி கோரவும், தளத்தைச் சரிசெய்யவும் பயன்படுத்தலாம். கையெறி குண்டுகள், தானியங்கி ஆயுதங்கள் ஏந்திய வீரர்கள், ஏன், அதிக தாக்குதல் சக்தி கொண்ட லாரிகள் மற்றும் டாங்கிகள் என பலவற்றை நீங்கள் எதிர்கொள்வீர்கள். வேலிகள் கட்டுங்கள், உங்கள் தளத்திற்கு வீரர்களைச் சேர்க்கவும், கையெறி குண்டுகளை எறியுங்கள் மற்றும் விமானத் தாக்குதல்களை வரவழைக்கவும். ஒவ்வொரு தளத்திலும் 10 நாட்களுக்கு உங்கள் நிலையைப் பாதுகாத்து நின்றால், அடுத்த தளத்திற்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எதிரிகளைத் தடுத்து நிறுத்தி, உங்கள் அனைத்துத் தளங்களையும் காப்பாற்றினால், நீங்கள் ஒரு தேசிய வீரர் ஆவீர்கள்!