ஃபேட் நிஞ்ஜா என்பது மறைந்திருந்து தாக்கும் ஒரு நிஞ்ஜா கேம் ஆகும். உங்கள் நிஞ்ஜா திறமைகளைப் பயன்படுத்தி, கட்டிடத்தினுள் நீங்கள் செல்லும் போது பாதுகாப்புப் பணியாளர்களிடம் சிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் மறைந்து கொள்ள வேண்டுமா அல்லது பாதுகாப்புப் பணியாளர்களைக் கொல்ல உங்கள் தாக்குதல் நகர்வுகளில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டுமா என்று உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். நீங்கள் பொருட்களுக்குப் பின்னால் மறைந்து கொள்ளலாம் அல்லது மேலே குதித்து கூரையில் தொங்கலாம். உங்கள் வாளால் தாக்கலாம் அல்லது உங்கள் ரகசிய ஆயுதமான உங்கள் வாயு (FARTS) மூலம் தாக்கலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் சிக்கிக் கொள்ளும்போது அலாரம் பட்டி உயரும், அது இறுதி நிலையை அடைந்தால், ஆட்டம் முடிந்தது.