விளையாட்டு கட்டுப்பாடுகள்
விளையாட்டு விவரங்கள்
மற்ற குழந்தைகளைப் போலவே, பேபி ஹேஸலும் தன் அம்மாவை மிகவும் நேசிக்கிறாள். அதனால், இந்த வருடம் அன்னையர் தின கொண்டாட்டத்துடன் அம்மாவை ஆச்சரியப்படுத்த விரும்புகிறாள். அதனால், பேபி ஹேஸல் தன் அப்பாவுடன் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருக்கிறாள். இந்தக் குட்டிப் பெண்ணுக்கு நீங்கள் உதவி செய்து, இந்தக் குடும்பக் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியுமா? முதலில் நீங்கள் ஹேஸலுடன் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்க வேண்டும். பிறகு அன்னையர் தின கேக் தயாரிக்க சமையலறைக்குச் சென்று, பின்னர் அறையை அலங்கரிக்க வேண்டும். பேபி ஹேஸல் மற்றும் அவள் குடும்பத்துடன் இந்தக் கொண்டாட்டமான நாளில் ஒரு அங்கமாக இருங்கள். மகிழுங்கள்!
அன்னையர் தினம் என்பது அம்மாக்களை கவனித்துக் கொள்ளவும், ஒருவரின் வாழ்க்கையில் அவர்களின் பங்களிப்பிற்காக நன்றி சொல்லவும் கொண்டாடப்படும் ஒரு நாள். தன் குழந்தைக்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் அம்மாதான் கவனித்துக் கொள்கிறாள், மேலும் அவளது தியாகத்தைப் போற்றுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
சேர்க்கப்பட்டது
29 ஜூன் 2019