குழந்தை அபி இந்த கோடையில் ஒரு மர வீடு வேண்டும் என்று கனவு காண்கிறாள், அங்கே அவளுடைய உற்ற தோழியுடன் விளையாடலாம் மற்றும் இரவு தங்கும் கொண்டாட்டங்களை நடத்தலாம். இந்த விளையாட்டை விளையாடி, அவளுக்குக் கோடைகால வீட்டைக் கட்டவும் அலங்கரிக்கவும் உதவுவதன் மூலம் அவளுடைய கனவை நனவாக்கு. உட்புறத்திற்குத் தேவையான தளவாடங்களை அமைத்து, அது ஒரு வீட்டைப் போல உணரும்படி செய். எல்லாம் முடிந்த பிறகு, குழந்தை அபி அவளுடைய உற்ற தோழி மற்றும் செல்லப் பிராணியுடன் தேநீர் விருந்து வைக்கலாம், அவர்கள் இரவு நேரத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கலாம் மற்றும் அங்கே இரவு தங்கலாம். அடுத்த நாள், குழந்தை அபிக்கு உடையணிய உதவி, சாகசங்கள் நிறைந்த ஒரு புதிய நாளைத் தொடங்கு!